கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சிறந்த மாணவர் கூட்டுறவு பண்டக சாலை: ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப் பள்ளி தேர்வு

மாநில அளவில் தொடர்ந்து 5-வது ஆண்டாக சிறந்த மாணவர் கூட்டுறவு பண்டகசாலையாக ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர் கூட்டுறவு பண்டகசாலை தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2012, 3:33 pm

கோ.ஜெயக்குமார்

மாநில அளவில் தொடர்ந்து 5-வது ஆண்டாக சிறந்த மாணவர் கூட்டுறவு பண்டகசாலையாக ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர் கூட்டுறவு பண்டகசாலை தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பாராட்டு விழா பள்ளியில், செயலாளர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எஸ்.ராஜூ வரவேற்றார்.

மாவட்ட துணைப் பதிவாளர் கே.ஜி.ஜானகிராமன், மாநில அளவில் தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடம் பெற்ற ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர் கூட்டுறவு பண்டகசாலையை பாராட்டி கேடயம் வழங்கினார்.

உதவித் தலைமை ஆசிரியர்கள் எல்.சங்கரநாராயணன், டி.பொன்னியின் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பண்டகசாலையின் செயலரும், உதவித் தலைமை ஆசிரியருமான கே.ஆறுமுப்பெருமாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.