கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஈரோ-ஆசிய சர்வதேச கருத்தரங்கில் சிறந்த கட்டுரை சமர்ப்பித்த கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியைக்கு பாராட்டு

மலேசியா நாட்டில் உள்ள டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 4-வது ஈரோ-ஆசிய சர்வதேச கருத்தரங்கில் சிறந்த கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றிய, கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியை யவனாராணிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்

News image
Updated On :13 டிசம்பர் 2012, 3:27 am

கோ.ஜெயக்குமார்

மலேசியா நாட்டில் உள்ள டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 4-வது ஈரோ-ஆசிய சர்வதேச கருத்தரங்கில் சிறந்த கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றிய, கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியை யவனாராணிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஈரோ-ஆசிய சர்வதேச கருத்தரங்கு, பிரான்ஸ் டொலொஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 4 நாட்கள் மலேசியாவில் உள்ள டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,சீனா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட 28 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.இந்த கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பிக்க கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக எம்.பி.ஏ. துறை பேராசிரியை யவனாராணிக்கு அழைப்பு வந்தது.இதன் பேரில் அவர் கருத்தரங்கில் கலந்து கொண்டு, கிராமங்களில் சுற்றுலா வளர்ச்சியில் பொருளாதார மேன்மை என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து, அதில் தமிழ்நாடு கிராமப்புற சுற்றுலா துறை வளர்ச்சிகள் குறித்து உரையாற்றினார்.

இக் கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டு, பேராசிரியை யவனாராணிக்கு சிறந்த கட்டுரைக்கான பரிசும், சான்றிதழும் கிடைத்தது. பரிசையும், சான்றிதழையும் கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர் மலேசிய பேராசிரியர் விக்னேஸ்வரன் நாயர் வழங்கினார். மேலும் இவரது கட்டுரை ஸ்கோப்பஸ் ஜர்னலிலும் உலகம் முழுவதும் அறியும் வகையில் பிரசுரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து பரிசு மற்றும் சான்றிதழ் பெற்று வந்துள்ள பேராசிரியை யவனாராணியை, பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் பி.கன்னியப்பன், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.