சாத்தூரில் பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்துநிலையம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சாத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கியின் முன்பு வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் முன்பு மர்மநபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர்.
அப்போது முதல் ஏடிஎம் இயந்திர அறை வங்கி நிர்வாகத்தால் பூட்டப்பட்டது. இதனால் இங்கு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாற்று வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை நாடிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளது. எனவே ஏடிஎம் இயந்திரத்தை திறக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் குறித்து விசாரணை: உச்சநீதிமன்றம் பரிந்துரை

பிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டா

மண்ணூா் காலனி அருகே தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றது சோனம், ஹிமான்ஷு இணை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


