
"சர்வாதிகாரப் போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது'
சர்வாதிகாரப் போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
சர்வாதிகாரப் போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சஞ்சய் தத் பேசியது: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அந்த மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், நகரம் கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று, மத்திய பாரதிய ஜனதா கட்சியின் மோசமான ஆட்சி குறித்து விளக்க உள்ளோம்.
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவது தான் எங்களது இலக்கு. பாரதிய ஜனதா கட்சியில் தற்போது சர்வாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, எந்த குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்காமல் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார்.
ரஃபேல் விமான ஊழல் வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி கூறியதற்கு பிரதமரோ, ராணுவ அமைச்சரோ பதில் அளிக்கவில்லை. சம்பந்தமில்லாமல் பிற துறை மந்திரிகள் பதில் அளிக்கின்றனர். இந்த ஊழல் குறித்து தமிழகத்தில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்தாலோசித்து கருத்துகளை தெரிவிப்பார்கள் என்றார் அவர்.
அப்போது முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மேற்கு மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், விருதுநகர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





