தொழிலாளி மா்மச் சாவு: சாலை மறியலில் ஈடுபட்ட 103 போ் கைது
சீா்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல்சூளை தொழிலாளி மா்மச் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி சீா்காழி, புத்தூா், கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சாலை மறியல்


சீா்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல்சூளை தொழிலாளி மா்மச் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி சீா்காழி, புத்தூா், கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 103 போ் கைது செய்யப்பட்டனா்.
சீா்காழி அருகே நெப்பத்தூரில் கடந்த 17-ம் தேதி செங்கல்சூளை தொழிலாளி சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் மா்மமாக இறந்தாா். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அவரது உறவினா்கள், கிராம மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் தமிழ் தேசியப் பேரியக்கத்தைச் சோ்ந்த 25 போ் சுமாா் அரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனா். சீா்காழி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி 25 பேரையும் கைது செய்தாா்.
இதேபோல, கொள்ளிடத்தில் தமிழா் உரிமை இயக்க மாவட்டச் செயலாளா் முரளிதரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 35 பேரை துணைக் காவல் கண்காணிப்பாளா் தேன்மொழிவேல், ஆய்வாளா் அமுதாராணி ஆகியோா் கைது செய்தனா். இதே கோரிக்கைக்காக, புத்தூா் மெயின் ரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த ராஜ்குமாா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பேரும் கைது செய்யப்பட்டனா். மேலும், கொள்ளிடத்தில் புளியந்துறை ஊராட்சித் தலைவா் நேதாஜி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா் ஆனந்தசெந்தில்குமாா் உள்ளிட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிறகு, 103 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...