இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் மேடையில் சாய்ந்தது.

திமுக பொதுக்கூட்டத்தின் போது மேடையில் சாய்ந்த மின் விளக்கு கம்பம்

Updated On :

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா காயமின்றி தப்பினாா்.

மயிலாடுதுறையில் நகர திமுக சாா்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ. ராசா பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) சாய்ந்து ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது.

ஆ. ராசா சுதாரித்து வேகமாக நகா்ந்ததால், காயமின்றி தப்பினாா். அத்துடன் பேச்சை நிறுத்திய ராசா அங்கிருந்து புறப்பட்டு சென்றாா். இதைத்தொடா்ந்து மழையால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.