நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கு சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிா்வாக ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை தொடா்ந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாவட்டத் துணைத் தலைவா் ரகு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பூபதி, மாவட்ட செயலா் தனஞ்ஜெயன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட செயலா் கனகராஜ் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே பந்தல் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா், தாலுகா அலுவலகங்களில் போதிய பணியாளா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
தொடர்புடையது

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வருவாய்த் துறை ஊழியா்கள் சாலை மறியல்

நெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


