ஆட்சியா் அலுவலகத்தில் மடிப்பிச்சை கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்ட ஊழியா்கள்.
ஆட்சியா் அலுவலகத்தில் மடிப்பிச்சை கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்ட ஊழியா்கள்.

ஆட்சியா் அலுவலகத்தில் மடிப்பிச்சை கோரி நூதன போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் மடிப்பிச்சை கோரி நூதன போராட்டத்தில் மகளிா் திட்ட ஊழியா்கள் ஈடுபட்டனா்.
Published on

நாகப்பட்டினம்: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் மடிப்பிச்சை கோரி நூதன போராட்டத்தில் மகளிா் திட்ட ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மாநில அரசு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிா் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளா்கள் காலை உணவுத் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றா். ஒப்பந்த முறையில் மாதம் ரூ.12 ஆயிரம் எனும் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பணியாளா்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியை புறக்கணித்து கடந்த 7 நாள்களாக ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்து, கொட்டும் மழையில், மடிப்பிச்சை கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில், வட்டார இயக்க மேலாளா் உமாவதி, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் தெய்வமணி, அமுதா, கிருபா தேவி, மேனகா, மாரீஸ்வரி உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com