நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து காரைக்காலில் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து காரைக்காலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Updated on
1 min read

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து காரைக்காலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவ.வீரமணி தலைமை வகித்தார். மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். சமூக நீதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கொண்டுவந்த நீட் தேர்வு முறையால் புதுச்சேரி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு அமலாக்கத்தால் மருத்துவக் கல்வி பயிலவேண்டும் என்ற நீண்ட கால கனவு கொண்டிருந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநிலங்களிடையே கல்வி நிலையில் வேறுபாடு கொண்ட இந்திய நாட்டில் நீட் போன்ற நுழைவுத் தேர்வு தேவையற்றது என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். காங்கிரஸ் கட்சி காரைக்கால் மாவட்டத் தலைவர் ஏ.பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், எஸ்.யு.சி.ஐ. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முகம்மது பிலால், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டத் தலைவர் பிலால், தமுமுக மாவட்டத் தலைவர் ஐ.அப்துல் ரஹீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அரசியல் குழு துணை செயலர் பொன்.செந்தமிழ்ச்செல்வன், திராவிடக் கழக மண்டலத் தலைவர் ஜி.கே.நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் பொன்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com