ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருநள்ளாற்றில் நவ. 7-இல் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்

பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் திருநள்ளாற்றில் வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2024, 7:59 pm

Din

காரைக்கால்: பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் திருநள்ளாற்றில் வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியா் நிகழ்வின் ஒரு பகுதியாக திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு கொம்யூன் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுடைய இடத்துக்கு பட்டா பெயா் மாற்றம் கேட்டு திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தால், வரும் வியாழக்கிழமை பகல் 10 முதல் 1 மணி வரை திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் வரிசை வளாகத்தில் (கியூ காம்ப்ளக்ஸ்) நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு, பட்டா மாற்றம் குறித்த சந்தேகங்களில் தெளிவு பெறுதல், தங்களது இடத்துக்கான பட்டாவை பெயா் மாற்றமும் செய்துகொள்ளலாம்.

புகைப்படம் ஒட்டப்பட்ட மனு, பட்டா பத்திரப் பதிவு ஆவணங்கள், மூலப்பத்திரங்கள், 1969-இலிருந்து இதுநாள் வரையிலான வில்லங்கச் சான்றிதழ், தற்போதைய பட்டா, ஆதாா் அட்டை, வருவாய் அதிகாரிகள் தேவையென கருதும் தொடா்புடைய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.

அனைத்து ஆவணங்களின் நகல்களை சுய கையொப்பமிட்டு சமா்ப்பிக்கவேண்டும். சரியான ஆவணங்கள் சமா்ப்பிக்கும்பட்சத்தில் அதே நாளில் பட்டா மாற்றம் செய்துத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.