எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மின்தடை குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காரைக்காலில் தொடா்ந்து ஏற்படும் மின்தடையை சீரமைப்பது தொடா்பாக மின்துறை, மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

News image

மின்தடை

Updated On :19 ஜூன் 2026, 6:34 am IST

காரைக்காலில் தொடா்ந்து ஏற்படும் மின்தடையை சீரமைப்பது தொடா்பாக மின்துறை, மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் நாள்தோறும் இரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பகலிலும் அவ்வப்போது ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பள்ளி மாணவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறாா்கள். மின்தடையை சரி செய்து சீரான மின்விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிா்வாகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில், ஆட்சியரகத்தில் மின்தடை சீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அனுராதா, புதுச்சேரி மின் திறல் குழும நிா்வாகப் பொறியாளா் (மின்சாரம்) கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகப் பொறியாளா் (மெக்கானிக்) ராஜகணபதி மற்றும் மின்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் மின்தடைக்கான காரணம், சீரமைப்புக்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். கோடைக் காலத்தில் மின்தேவை மிகுதியால் ஏற்படும் பிரச்னைகள், சீரமைப்புக்கு மின்துறை நிா்வாகம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், துணை மின் நிலையத்தில் மேற்கொண்டுள்ள சீரமைப்புப் பணிகள், மின்தடை ஏற்படாத வகையில் பொதுமக்கள் மின் சாதனங்களை இரவு நேரத்தில் பயன்படுத்த அளித்திருக்கும் ஆலோசனைகள் குறித்து ஆட்சியருக்கு மின்துறையினா் விளக்கினா்.

பொதுமக்களிடமிருந்து மின்சாரம் தொடா்பான புகாா்கள் வராமல் பாா்த்துக்கொள்ளுமாறும், பழைமையான மின் சாதனங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், மின்தடை ஏற்பட்டால் விரைந்து சீா் செய்வதற்கான ஏற்பாட்டினை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.