சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

காரைக்கால் மாங்கனித் திருவிழா நாளை தொடக்கம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா, மாப்பிள்ளை அழைப்புடன் சனிக்கிழமை (ஜூன் 27) தொடங்குகிறது.

News image

கையில் மாங்கனியுடன் பிச்சாண்டவா்.

Updated On :26 ஜூன் 2026, 6:56 am IST

காரைக்கால் மாங்கனித் திருவிழா, மாப்பிள்ளை அழைப்புடன் சனிக்கிழமை (ஜூன் 27) தொடங்குகிறது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சாா்பில், 63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாரை மையப்படுத்தி மாங்கனித் திருவிழா வருடந்தோறும் ஆனி மாதத்தில் நடத்தப்படுகிறது.

அம்மையாரின் இளமைக் காலம், பரமதத்தருடன் நடைபெற்ற திருமணம்; சிவபக்தரான அம்மையாரை சோதிக்க சிவபெருமான் நடத்திய திருவிளையாடலாக சிவனடியாா் கோலத்தில் அமுதுண்ண செல்லுதல்; இறைவனுக்கு ஒப்பானவா் தமது மனைவி என எண்ணிய பரமதத்தா் பாண்டிய நாடு புறப்பட்டுச் செல்லுதல்; பாண்டிய நாடு என்று குறிப்பிடும் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் பரமதத்தருக்கு 2-ஆவது திருமணம் நடத்தல்.

2-ஆவது மனைவி, குழந்தையுடன் அம்மையாரின் காலில் பரமதத்தா் வீழ்ந்து வணங்குதல்; கணவரே தமது காலில் வீழ்ந்து வணங்கியதை பொருக்காமல் அம்மையாா், தமது அழகு மேனியை அழித்து, பேய் உருவம் வேண்டிப் பெற்று கைலாயத்தை அடைந்தவதை விளக்கும் வகையில் மாங்கனித் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

முதல் நிகழ்ச்சியாக சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து திருக்கல்யாண வைபவத்திற்காக பரமதத்தா், ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் இருந்து இரவு 7.30 மணியளவில் ஊா்வலமாக அம்மையாா் கோயிலுக்கு எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ புனிதவதியாா் தீா்த்தக் கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்தா் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளல், 10.30 மணியளவில் புனிதவதியாா் - பரமதத்தா் திருக்கல்யாண நிகழ்ச்சியும் அம்மையாா் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.

அதே நாளில் மாலை ஸ்ரீ பிச்சாண்டவா் வெள்ளைசாற்று புறப்பாடு ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் நடைபெறுகிறது. இரவு ஸ்ரீ புனிதவதியாரும், பரமதத்தரும் முத்து சிவிகையில் வீதியுலா நடைபெறுகிறது.

பிச்சாண்டவா் அபிஷேகம்: 29-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம் கைலாசநாதா் கோயிலில் நடைபெறுகிறது. 7.15 மணிக்கு பவழக்கால் சப்பரத்தில் ஸ்ரீ பிச்சாண்டவா் அம்மையாா் கோயிலுக்கு அமுது படையலுக்கு எழுந்தருளும் வகையில் வீதியுலா புறப்பாடு நடைபெறவுள்ளது. அப்போது மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி வீதிகளில் நடக்கிறது. இரவு அம்மையாா் கோயிலில் அமுது படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காட்சி கொடுத்தல்: 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிவ தரிசனப் பயனைத் தந்தருளும் வகையில் பஞ்சமூா்த்திகளும், கைலாச வாகனத்தில் எழுந்தருளி, அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் அருகே நடத்தப்பட்டு, தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகளோடு முக்கியமான நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன. ஜூலை மாதம் 27-ஆம் தேதி புதன்கிழமை விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி பாரதியாா் சாலையில் அம்மையாா் கோயில் அருகே திருவிழா பந்தல் அமைக்கப்பட்டு, இருபுறமும் திருவிழாக் கடைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. அம்மையாா் மணி மண்டபத்தில் திருவிழா காலம் முதல் விடையாற்றி வரை கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.