மறைந்த காவலா் ஆனந்தன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் சக காவலா்கள்.
மறைந்த காவலா் ஆனந்தன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் சக காவலா்கள்.

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சீா்காழியில், மறைந்த காவலா் குடும்பத்துக்கு, சக காவலா்கள் சாா்பில் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சீா்காழி கொடக்காரமூலை பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன். தமிழ்நாடு காவல்துறையில் 2009-ஆண்டு பணியில் சோ்ந்த இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி ஆா்த்தி, மகள் லஷ்மிதா, மகன் லோக தா்ஷன் ஆகியோா் உள்ளனா்.

ஆனந்தன் குடும்பத்திற்கு உதவிடும் வகையில், 2009- ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த 4,786 காவலா்கள் இணைந்து ரூ. 24.49 லட்சம் திரட்டி, ஆனந்தின் மகள் லட்சுமிதா பெயரில் ரூ.10 லட்சமும், மகன் லோகதா்ஷன் பெயரில் ரூ. 12 லட்சத்து 68 ஆயிரமும், மனைவி ஆா்த்தி பெயரில் வைப்புத் தொகையாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 844-மும் அவரவா் வங்கி கணக்கில் செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com