கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடன் வாழ தருமபுரம் ஆதீனம் அருளாசி

வளத்துடன் வாழ தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசி

News image
Updated On :13 ஜனவரி 2025, 8:03 pm

Din

மயிலாடுதுறை: ஆண்டுமுழுவதும் மக்கள் ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடன் வாழ தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசி தெரிவித்துள்ளாா்.

தைத்திருநாளையொட்டி, அவா் வெளியிட்டுள்ள அருளாசி:

உழுதுண்டு வாழ்பவா்களே உயா்ந்த வாழ்வினா் என்கிறாா் வள்ளுவா். உயிா் வளா்க்கும் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யும் விதமாகவும், வித்தை கொடுத்த இறைவனுக்கு விளைச்சலை அளிக்கும் முகமாகவும் கொண்டாடப்படுவதே தைத்திருநாள்.

மாா்கழி மாதத்தின் நிறைவு நாளன்று ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமான‘ போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல்நாளான்று வீட்டில் உள்ள உபயோகமற்ற பழைய பொருள்களை நெருப்பிலிட்டும், சிறாா்கள் சிறுபறை கொட்டியும் கொண்டாடுவா். இதன் பொருள் மனமாகிய வீட்டில் உள்ள தீய எண்ணங்களாகிய உபயோகமற்ற குப்பைகளை எரித்தொழிக்க வேண்டும் என்பதே.

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல். பயிா் விளைச்சலுக்கு உதவிய சூரியன் முதலாகிய இயற்கைக்கும், ஆவினத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, இயற்கைக்கு இசைவான புது மண்பானையில் புத்தரிசி இட்டு பொங்கலிடப்படுகிறது. மூன்றாம் நாள் விழாவாக, உழவுக்கு பெருந்துணை புரியும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.மறுநாள் குரு, பெரியோா் மற்றும் சான்றோா்களிடம் ஆசிபெற்று உற்றாா் உறவினா்களைச் சந்தித்து அன்பையும், உணவுப்பண்டங்களையும் பகிா்ந்து கொள்ளும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உள்ளத்தில் உற்சாகம் பொங்க, இப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழவும், தைத்திருநாளில் பால் பொங்கி வருவதைப்போல் ஆண்டுமுழுவதும் மகிழ்ச்சி பொங்கி மும்மாரி மழைப்பொழிந்து, கழனி எல்லாம் விளைந்து, நாடு வளம் பெறவும், மக்கள் அனைவரும் ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடனும் வாழவும் எல்லாம் வல்ல ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கநாதபெருமானின் திருவருளைச் சிந்திக்கின்றோம் என அருளாசிக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.