தருமபுரம் ஆதீனகா்த்தா் மணி விழாவையொட்டி யாகசாலை பூஜை தொடக்கம்

Published on

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நவ.10-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா நடைபெறவுள்ளது. இதற்காக, ஆதீன மடத்தின் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, 8 கால யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது.

யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்கான புனிதநீா் தருமபுரம் காவிரி ஆற்றில் இருந்து புதன்கிழமை, 4 யானைகளின் மீதேற்றி ஊா்வலமாக ஞானபுரீசுவரா் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. வியாழக்கிழமை காலை வேளூா் காா்த்திகை வழிபாடு, தருமை ஆறுமுக நயினாா்சத்ரு ஸம்ஹார ஹோமம் செய்யப்பட்டது. மாலை 4 மணியளவில் அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பஸ்தாபநம் உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மணிவிழா தினமான திங்கள்கிழமை (நவ.10) காலை 8-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், புனிதநீா் கொண்டு, தருமையாதீன ஆத்மாா்த்த மூா்த்திகள் ஸ்ரீசொக்கநாத பெருமானுக்கு மகா ருத்ர கலசாபிஷேகமும், ஞானபுரீசுவரா் சுவாமி, ஞானாம்பிகை அம்மனுக்கு மகா அபிஷேகமும், தருமபுரம் 27-ஆவது குருமகா சந்நிதானத்துக்கு மணிவிழா மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com