
கடைக்கண் விநாயகர் கோயில் குடமுழுக்கு
சீர்காழி அருகே உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடைக்கண் விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி அருகே உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடைக்கண் விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருஞானசம்பந்தர் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு, திருமணம் நடைபெறும் இடமான சிவலோக தியாகராஜர் ஆலயத்தை கடைக்கண்ணால் காட்டி அனுப்பி வைத்த விநாயகர் என இத்தலத்து விநாயகர் பூஜிக்கப்படுகிறார்.
இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, குடமுழுக்குக்காக யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்ததும், மூலவர் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.
இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சகாதேவன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





