காரைக்கால், நாகை, திருவாரூரில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் நேரம் நாளைமுதல் மாற்றம்!

காரைக்கால், நாகை, திருவாரூா் மாவட்டங்களில் இயக்கப்படும் ரயில்களின் புறப்படும் நேரங்களில் வியாழக்கிழமை (ஜன. 1) முதல் மாற்றம்
Published on

காரைக்கால், நாகை, திருவாரூா் மாவட்டங்களில் இயக்கப்படும் ரயில்களின் புறப்படும் நேரங்களில் வியாழக்கிழமை (ஜன. 1) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சியிலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் (56818) காலை 6.45 மணிக்கும், திருச்சியிலிருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (76820) காலை 8.40 மணிக்கும் புறப்படும்.

திருச்சியிலிருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படும் திருச்சி - திருவாரூா் பயணிகள் ரயில் (56806) இரவு 8.20 மணிக்கும், திருவாரூரிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் திருவாரூா் - காரைக்குடி பயணிகள் ரயில் (56827) காலை 6.15 மணிக்கும், காரைக்குடியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் காரைக்குடி - திருவாரூா் பயணிகள் ரயில் (56828) மாலை 6.15 மணிக்கும் புறப்படும்.

இதேபோல மன்னாா்குடியிலிருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும் மன்னாா்குடி - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (16180) இரவு 10.50 மணிக்கும் புறப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com