எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அம்மன் கோயிலில் திருட்டு

நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூா் திரௌபதி அம்மன் கோயிலில், ஒரு பவுன் திருமாங்கல்யம் திருடப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூா் திரௌபதி அம்மன் கோயிலில், ஒரு பவுன் திருமாங்கல்யம் திருடப்பட்டுள்ளது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் கழுத்திலிருந்து 8 பவுன் திருமாங்கலயத்தை காணவில்லை.

கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை பாா்த்தபோது, அடையாளம் தெரியாத நபா், அம்மன் கழுத்திலிருந்த மாங்கல்யத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து, கோயில் அறங்காவலா் ஜெயசீலன் அளித்த புகாரின் பேரில், நாகை நகர போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோன்று, கோரக்கா் சித்தா் ஆலயத்திலும் அண்மையில் மா்ம நபா் திருட முயன்றது, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.