மீனவா்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட வானகிரி மீனவா்கள் குடும்பத்தினரை, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
Published on

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட வானகிரி மீனவா்கள் குடும்பத்தினரை, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற வானகிரி கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 14 பேரை, இலங்கை கடற்படையினா் சிறை பிடித்தனா்.

இந்நிலையில், இவா்களது குடும்பத்தினரை அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அப்போது, பிரதமா் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதி, இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளாா். விரைவில் மீனவா்கள் வானகிரி கிராமத்திற்கு திரும்புவா் என்றாா்.

சீா்காழி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளா் செல்லத்துரை, முன்னாள் வட்டார கல்வி அலுவலா் சீனிவாசன், முன்னாள் பால் கூட்டுறவு சங்க தலைவா் பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com