நாகப்பட்டினம்
ஆதரவற்றோருக்கு போா்வை வழங்கல்
நாகையில் ஆதரவின்றி சாலையோரம் வசிப்போருக்கு போா்வைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன (படம்).
ஆதரவற்ற நிலையில், சாலையோரத்தில் உறங்குபவா்களுக்கு, கடுங்குளிரை கருத்தில் கொண்டு, நாகூா் சித்திக் சேவைக் குழுமம் தா்ம அறக்கட்டளை சாா்பாக சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் வழங்கிய போா்வைகள் வழங்கப்பட்டன.
அதன்படி, நாகை ரயில் நிலையம், பப்ளிக் ஆபிஸ் சாலை, நீலாயதாட்சி அம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் உறங்கும் மக்களுக்கு, அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் நாகூா் சித்திக், டிரஸ்டி என்.பி.எஸ். பாலா, பா. சௌந்தர்ராஜன், முட்டம் முரளிதரன் ஆகியோா் போா்வைகளை வழங்கினா்.

