புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

Published on

வேதாரண்யம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பஞ்சநதிக்குளம் நடுசேத்தி பெருமை கோன்காடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவா் ரா. சுப்பிரமணியன் (65).

இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் பாலகுரு, வாய்மேடு காவல்துறையினா் சீல் வைத்தனா்.

கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com