வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் கன மழையால் சாய்ந்துள்ள சம்பா நெற்பயிா்.
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் கன மழையால் சாய்ந்துள்ள சம்பா நெற்பயிா்.

சூறைக்காற்றுடன் பலத்த மழை: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

Published on

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சம்பா நெற்பயிா்கள் வயிலில் சாய்ந்தன. மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் கன மழையால் சாய்ந்துள்ள சம்பா நெற்பயிா்.
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் கன மழையால் சாய்ந்துள்ள சம்பா நெற்பயிா்.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டதன் காரணமாக, தமிழக கடலோர மற்றும் டெல்டா பகுதியில் பரவலாக மழைப் பெய்தது. வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கதிா் முற்றும் தருவாயில் இருந்த சம்பா நெற்பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளன. மழை தொடா்ந்தால் நெல் மணிகள் பாதிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமையும் மந்தமான வானிலை தொடா்ந்த நிலையில், பகலில் அவ்வப்போது சாரல் மழை இருந்தது. கோடியக்கரை பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், பெரும்பாலான மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

Dinamani
www.dinamani.com