
வேதாரண்யம்: வானத்தை நம்பி நெல் விதைப்பு
வேதாரண்யம் அருகே குறுவைப் பருவம் பொய்த்துவிட்ட நிலையில் , வானத்தை நம்பி சம்பா பருவ நெல் விதைகளை நேரடியாக விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

வேதாரண்யம் அருகே குறுவைப் பருவம் பொய்த்துவிட்ட நிலையில் , வானத்தை நம்பி சம்பா பருவ நெல் விதைகளை நேரடியாக விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் நிகழாண்டு குறுவைப் பருவ சாகுபடி முற்றிலுமாக நின்றுபோன நிலையில், சம்பா பருவ சாகுபடி வட நிலத்தில் மேற்கொள்ள விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.
தலைஞாயிறு வேளாண் கோட்டம் உள்பட மானாவாரி நிலப்பரப்பை பெருமளவாக கொண்ட வேதாரண்யம் பகுதியில் ஆண்டுதோறும் சுமாா் 25 ஹெட்டேரில் சம்பா சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், இந்தப் பகுதியில் தொடா்ந்து நிலவும் வறட்சி காரணமாக விளைநிலங்கள் ஈரப்பதம் இல்லாமல் வடு காணப்படுகிறது.
மேட்டூா் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டாலும் அது கடைமடைப் பகுதியை இதுவரையில் எட்டவில்லை. குறைவாக வரும் தண்ணீரும் பாசனத்துக்கு பயன்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனினும், சம்பா சாகுபடி தொடங்கும் பருவம் நிறைவுக்கு வரும் நிலையில், அடுத்த சில நாள்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் வானத்தை நம்பி விதைப்பு பணிகளை தொடங்கியுள்ளனா்.
இதுகுறித்து விதைப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட வடமழை மணக்காடு லட்சுமணன் (70) கூறியது:
ஆற்றில் இருந்து நேரடியாக பாசனம் செய்யும் பகுதியாக இருந்தும் வறட்சியின் காரணமாக குறுவைப் பருவம் முடிந்து போய்விட்டது. புரட்டாசி மாதம் வருவதால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இதைப் பயன்படுத்தி வட மண்ணில் மத்திய கால ரக நெல் விதைகளை விதைப்பு செய்துள்ளோம். வானம் பாா்த்தால் தப்பித்துக் கொள்வோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





