கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நான்கு ஊராட்சிகளில் மின் பாதுகாப்பு அறிவிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

மன்னார்குடி மேற்குப் பிரிவு மின் வாரியம் சார்பில்,  மின் பாதுகாப்பு அறிவிப்பு விழிப்புணர்வு பிரசாரம், புதன்கிழமை நான்கு ஊராட்சிகளில் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:47 pm

DIN

மன்னார்குடி மேற்குப் பிரிவு மின் வாரியம் சார்பில்,  மின் பாதுகாப்பு அறிவிப்பு விழிப்புணர்வு பிரசாரம், புதன்கிழமை நான்கு ஊராட்சிகளில் நடைபெற்றது.
நெடுவாக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ,உதவி செயற்பொறியாளர் ஆ.மதியழகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி மின் கோட்ட செயற்பொறியாளர் கி.ராதிகா கலந்துகொண்டு, விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
மின் கம்பிகள் அறுந்து கிடப்பது தெரிய வந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மின்வாரியம் சாராத நபர்களைக் கொண்டு மின்மாற்றி, மின்கம்பங்களில் மின் பழுதினை சரி செய்யக்  கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக் கூடாது. மின் கம்பிகளில் துணிகளைக் காயவைக்கக் கூடாது. மின்பாதை அருகில் செல்லும் மரக்கிளைகளை மின் ஊழியர்கள் உதவியுடன் அகற்றவேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப்  பிரசுரங்களை பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு வழங்கியும், ஒலிபெருக்கி அமைத்து வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இளமின் பொறியாளர் ராஜகோபால் தலைமையில், நெடுவாக்கோட்டை, கீழத்திருபாலக்குடி, நெம்மேலி, சுந்தரக்கோட்டை ஆகிய நான்கு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.