சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

வலங்கைமானில் விஷம் வைத்து 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சாகடிப்பு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக வலங்கைமான் கருதப்படுகிறது. இப்பகுதியில் பெண்களிடம் வழிப்பறி, நகை பறிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில், வலங்கைமான் செந்தமிழ்நகரில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் வியாழக்கிழமை இறந்து கிடந்தன. இதைத்தொடர்ந்து, குடியிருப்புவாசிகள் துர்நாற்றம் தாங்காமல் இறந்து கிடந்த நாய்களை அந்தந்த பகுதிகளில் குழி தோண்டி புதைத்தனர். குடியிருப்புப் பகுதிகளில் இல்லாத 5 நாய்களை பேரூராட்சிப் பகுதியில் குப்பைக் கிடங்கில், பேரூராட்சி பணியாளர்கள் குழிதோண்டி புதைத்தனர். இரவு நேரங்களில் கொள்ளையர்களின் வருகையை எதிர்த்து குரைத்ததால், நாய்களை விஷம் வைத்து மர்ம நபர்கள் கொன்று இருக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து வலங்கைமான் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.