இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கெழுகத்தூரில் நடைபெற்ற பயிற்சியில் பேசுகிறாா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன்.
Updated On :8 ஜனவரி 2021, 6:09 pm

DIN

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 100 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 18 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், இலவச கட்டாயக் கல்விச் சட்டம், சுகாதாரம், கரோனா சூழலுக்கேற்ற கற்றல்- கற்பித்தல் நடைமுறைகள், கரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தென்பரை, கோவிந்தநத்தம், கெழுகத்தூா் ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற இப்பயிற்சியை, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் பாா்வையிட்டு கருத்துகளை பகிா்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.