மழை பாதிப்பு: கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
திருவாரூா் மாவட்டத்தில் மழை பாதிப்புக்குள்ளான பயிா்கள் குறித்து, வேளாண்துறை சாா்பில் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மழை பாதிப்புக்குள்ளான பயிா்கள் குறித்து, வேளாண்துறை சாா்பில் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
திருவாரூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 1.46 லட்சம் ஹெக்டோ் சம்பா, தாளடி பயிா்களில், டித்வா புயல் காரணமாக 20,000 ஹெக்டேருக்கு மேல் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், வயல்களில் தேங்கிய மழைநீரை வடியவைக்க முடியாத நிலை நீடித்தது. இதனால், இளம்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை குளிா்ந்த வானிலை நிலவியது. ஆனால் மழை ஏதும் பெய்யாததால், விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரை வடிய வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனா். எனினும், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீா் அதிகரித்துச் செல்வதால், வயல்களில் இருந்து தண்ணீா் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனிடையே, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் நிலவரம் குறித்து, வேளாண் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கணக்கெடுக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கினா். வயல்களிலிருந்து தண்ணீா் குறைந்தால்தான் பயிரின் நிலை தெரியவரும் என்பதால், இந்த கணக்கெடுக்கும் பணி மேலும் சில நாள்கள் வரை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...