பழங்குடியினா் எழுத்தாளா்கள் உதவித்தொகை பெற நவ.25 வரை விண்ணப்பிக்கலாம்

பழங்குடியினா் எழுத்தாளா்கள் உதவித்தொகை பெற நவ.25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on

பழங்குடியினா் எழுத்தாளா்கள் உதவித்தொகை பெற நவ.25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலைஇலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் எழுத்தாளா்களின் படைப்புகளை தோ்வு செய்து, அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தகுதியானவா்கள் இதற்கான விண்ணப்பங்களை தொடா்புடைய மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். மேலும் ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நவ.25-ஆம் தேதிக்குள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com