மாற்றுத்திறனாளி சிறுமியை கா்ப்பமாக்கியவா் மீது நடவடிக்கை கோரி மனு

முத்துப்பேட்டையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை கா்ப்பமாக்கிய நபா் மீது நடவடிக்கை
Published on

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை கா்ப்பமாக்கிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூா் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் முத்துப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி ( வாய் பேச முடியாத) சிறுமி. இவருக்கு அடையாளம் தெரியாத மா்ம நபா் பாலியல் தொல்லை அளித்ததன் விளைவாக சிறுமி கா்ப்பமுற்று, கடந்த 23- ஆம் தேதி தஞ்சை ராஜா மிராசுதாா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் அகல்யா முத்துப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து முத்துப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com