இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மோசடி வழக்கில் தேடப்பட்டவர்  14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

தில்லியில் மோசடி வழக்கில் தேடப்பட்ட நபர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தில்லியில் மோசடி வழக்கில் தேடப்பட்ட நபர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
 இது குறித்து தென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் கூறியதாவது: 
தில்லியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசாத். இவர் கடந்த 1996-இல் நேரு பிளேஸில் ஒரு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்தார். அப்போது, புதிய காசோலைப் புத்தகத்தைப் பெற அவரது உதவி மேலாளரின் கையெழுத்தை போலியாக இட்டு கடிதம் தயாரித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வங்கியில் இருந்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரசாத்துக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட இவர், ஒரு மாதத்திற்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான இவர், அதன் பிறகு தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சகோதரரின் வீட்டின் கூரை மராமத்துப் பணியைச் செய்வதற்காக பிரசாத் தில்லி வந்தார். அப்போது, அவரது நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து, இவர் கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரி சின்மய் பிஸ்வால் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.