லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தலைநகரில் உச்சம் தொட்டது கரோனா பாதிப்பு

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாழக்கிழமை 5,739 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

Updated On :29 அக்டோபர் 2020, 7:05 pm


புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாழக்கிழமை 5,739 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். புதன்கிழமை தில்லியில் 5,673 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை கரோனா பாதிப்பு அதைவிட அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,75,753-ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் வியாழக்கிழமை 27 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,423-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை மொத்தம் 60,124 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 17,029 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 43,095 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.71 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.90 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து வியாழக்கிழமை 4,138 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,38,378-ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 30,952 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,749 படுக்கைகளில் 5,854 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 9,895 படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3,113-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 18,069 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.