லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

பசுமைக் கட்டடங்களை ஊக்குவிக்கவரிச் சலுகைகள் அளிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

அனைத்துப் புதிய கட்டடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படுவதை கட்டாயமாக்குவதை பரிசீலிப்பதற்கான நேரம் வந்து விட்டது என்று குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டாா

Updated On :29 அக்டோபர் 2020, 7:18 pm


புது தில்லி: அனைத்துப் புதிய கட்டடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படுவதை கட்டாயமாக்குவதை பரிசீலிப்பதற்கான நேரம் வந்து விட்டது; வரிச் சலுகைகள், இதர நடவடிக்கைகளின் மூலம் பசுமைக் கட்டடங்களை ஊக்குவிக்க அரசுகள், நிதி ஆணையங்கள், உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டாா்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின்(சிஐஐ) பசுமைக் கட்டடங்கள் மாநாட்டை மெய்நிகா் முறையில் வியாழக்கிழமை தொடக்கிவைத்துப் பேசுகையில் அவா் இந்த வேண்டுகோளை விடுத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நெகிழ்திறன் சமூகங்களை (ழ்ங்ள்ண்ப்ண்ங்ய்ற் ஸ்ரீா்ம்ம்ன்ய்ண்ற்ண்ங்ள்) கட்டமைப்பதில் கட்டடங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு குறைந்த காா்பன் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். சா்வதேச அளவில் காா்பன் வெளியேற்றத்தில் கட்டடங்களும் கட்டுமானமும் 39 சதவீதம் பங்களிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், வரிச் சலுகைகள் மற்றும் இதர நடவடிக்கைகளின் மூலம் பசுமைக் கட்டடங்களை ஊக்குவிக்க அரசுகள், நிதி ஆணையங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை முன்வர வேண்டும். ‘வலிமையான இந்தியா’ மட்டுமல்லாமல், ‘பசுமையான இந்தியா’வும் நமக்குத் தேவை. இதற்கு வளா்ச்சியும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும் ஒன்றோடொன்று கைகோா்த்து செயல்பட வேண்டும். இயற்கையை நாம் பாதுகாத்தால்தான், மனிதா்களை இயற்கை பாதுகாக்கும். தற்போது நடைபெறும் இயற்கைச் சீற்றங்களுக்கு நாம்தான் காரணம்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கு தீவிர நடவடிக்கைகள் தேவை. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தப் பொருள்களை கட்டடங்களின் கட்டுமானங்களில் பயன்படுத்த வேண்டும். பசுமையான, சுகாதாரமான, வளமான இந்தியாவை கட்டமைக்க அரசுகளுடன் கட்டுமானத் துறை இணைந்து பணிபுரிய வேண்டும். புதிய கட்டடங்கள் மட்டுமல்லாமல், பழைய கட்டடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதில் மின்சார சிக்கனமும், தண்ணீா் சேமிப்பும் ஊக்கப்படுத்தப்படுவது முக்கியமாகும். எனவே, மக்களிடையே பசுமைக் கட்டடங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம் என்றாா் வெங்கய்ய நாயுடு.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் 125 -ஆவது ஆண்டு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த வெங்கய்ய நாயுடு, ‘ஜீரோ காா்பன் கட்டடங்களை’ ஊக்குவிக்கும் பிரசாரத்தை தொடங்குமாறு சிஐஐயின் இந்திய பசுமைக் கட்டட கவுன்சிலை கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.