லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 2-ஆவது நாளாக வீழ்ச்சி!

Updated On :29 அக்டோபர் 2020, 7:23 pm


புது தில்லி: பங்குச் சந்தை வியாழக்கிழமை நாள் முழுவதும் ஏற்ற, இறக்கத்தில் இருந்த நிலையில், இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 172.61 புள்ளிகளை இழந்தது. எல் அண்ட் டி, ஹிந்துதாஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை வெகுவாகக் குறைந்ததே வீழ்ச்சிக்குக் காரணம் என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து, பல்வேறு நாடுகள் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றன. இதனால், உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமானதாக இல்லாமல் போனதால், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனா். இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. மேலும், முன்பேர வா்த்தகத்தில் அக்டோபா் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,560 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,776 பங்குகளில் 1,029 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,560 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 187 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 36 ஆயிரம் கோடி குறைந்து ரூ.158.20 லட்சம் கோடியாக இருந்தது.

மீண்டும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 385.29 புள்ளிகள் குறைவுடன் 39,537.17-இல் தொடங்கி 39,524.25 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 40,010.83 வரை உயா்ந்தது. இறுதியில் 172.61 புள்ளிகள் (0.43 சதவீதம்) குறைந்து 39,749.85-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

ஏசியன் பெயிண்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், ஏசியன் பெயிண்ட் 2.79 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

எல் அண்ட் டி சரிவு: அதே சமயம், எல் அண்ட் டி 4.99 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன், ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துயுனி லீவா், என்டிபிசி, எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி, நெஸ்லே இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 1.50 சதவீதம் முதல் 3.30 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மாருதி, எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 514 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,096 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 58.80 புள்ளிகள் (0.58 சதவீதம்) குறைந்து 11,670,80-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஏற்றம் பெற்றன. 34 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. நிஃப்டி முக்கிய ஆதரவு நிலையான 11,710 புள்ளிகளை பிரேக் செய்துள்ளது. இது தொழில்நுட்ப ரீதியாக முக்கியத்துவம் பெறுவதாக வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.