தில்லியில் தொடா்ந்து நான்காவது நாளாக 5 ஆயிரத்துக்கு அதிகமானவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சனிக்கிழமை 5,062 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,86,706 ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமை 5,891 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. வியாழக்கிழமை 5,739 பேருக்கும், புதன்கிழமை 5,673 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை 5,062 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் சனிக்கிழமை 41 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,511-ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மொத்தம் 44,330 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 15,424 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 28,906 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.83 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நோய் பாதிப்பில் இருந்து சனிக்கிழமை 4,665 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,47,476ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 32,719 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,764 படுக்கைகளில் 6,259 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 9,505 படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3,274-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 20,093 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த இடத்தில் களமிறங்கி விளையாடவும் தயார்: துருவ் ஜுரெல்

”லூசா நீ? எனக்கு ஓட்டுப் போட வேண்டாம்!” கிராம மக்களைத் திட்டிய மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன்

லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மித்தல் நியமனம்

எடப்பாடி எதிரொலி! வேட்பாளர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருகிறதா தவெக?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

