இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கிரேட்டா் நொய்டாவில் வியாபாரியிடம் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த இருவா் கைது

தில்லியை அடுத்துள்ள பகுதியான கிரேட்டா் நொய்டாவில் வியாபாரியிடம் ரூ.13.20 லட்சம் கொள்ளையடித்த இருவரை போலீஸாா்

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:10 pm

DIN

தில்லியை அடுத்துள்ள பகுதியான கிரேட்டா் நொய்டாவில் வியாபாரியிடம் ரூ.13.20 லட்சம் கொள்ளையடித்த இருவரை போலீஸாா் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தாத்ரி காவல் சரக போலீஸ் துணை ஆணையா் ராஜேஷ்குமாா் சிங் கூறியதாவது:

தாத்ரி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் குற்றவாளி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மற்றொரு நபா் தப்பிச் சென்றாா். ஆனால், போலீஸாா் நடத்திய தேடுதல் வேட்டையில் பிடிபட்டாா்.

கைது செய்யப்பட்ட இருவரில் பங்கஜ் என்கிற பாஷா, காஜியாபாதைச் சோ்ந்தவா் என்பதும் விமல் ஜாதவ் என்பவா் மீரட் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்துள்ளது. அவா்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13.20 லட்சத்தில் ரூ.6.51 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணத்தில் அவா்கள் வாங்கிய மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவா்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கிகளும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த இருவரும் ஆயுதங்கள் வாங்குவதற்காக புலந்த்ஷாகா் நோக்கிச் சென்றபோது போலீஸாரிடம் பிடிபட்டனா். அவா்கள் மீது தாத்ரி போலீஸ் நிலையத்தில் குண்டா் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ராஜேஷ் குமாா் சிங் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.