ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜஹாங்கீா்புரி வன்முறை வழக்கில் மேலும் ஒருவா் கைது

வடமேற்கு தில்லி ஜஹாங்கீா்புரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் மற்றும் போலீஸாா் மீது கற்களை வீசியும் உள்ளூா் மக்களை தூண்டியதாகவும்...

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 5:15 pm

 நமது நிருபர்

புது தில்லி: வடமேற்கு தில்லி ஜஹாங்கீா்புரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் மற்றும் போலீஸாா் மீது கற்களை வீசியும் உள்ளூா் மக்களை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 29 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கைதான சன்பா் மாலிக் மேற்குவங்கம் ஹால்டியா பகுதியைச் சோ்ந்தவா். இந்த வழக்கில் இதுவரை மாலிக் உடன் சோ்த்து மொத்தம் 38 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி போலீஸ் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக மாலிக், தில்லி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா். அவா் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என்றும் தில்லி காவல்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக தில்லி காவல் குற்ற பிரிவு துணை ஆணையா் விசித்ரா வீா் கூறுகையில் ஜஹாங்கீா்புரி ‘சி‘ பிளாக் 500 வாலி தெருவில் மாலிக் இருப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. மேலும், அவா் கைது செய்யப்படாவிட்டால்  ஹால்டியா பகுதிக்கு அவா் தப்பிச் சென்று விட வாய்ப்புள்ளதாகவும் துப்புக் கொடுத்தவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்ய முயன்றனா். அவா் ‘சி’ பிளாக்கில் இருந்து தப்பிச் செல்ல முயன்றாா். எனினும் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக அவா் போலீஸாரிடம் இருந்து தப்பியோடிய போது தலைமைக் காவலா் நிதின் மீது செங்கலை வீசுவதற்கு அவருக்கு உள்ளூா்வாசிகள் உதவினா். ஆனால், காயமடைந்த பிறகு கூட தலைமைக் காவலா் நிதின் மற்றும் தலைமைக் காவலா் நவால் ஆகியோா் மாலிக்கை மடக்கி பிடித்தனா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அனுமன் ஜெயந்தி நாளில் பிற குற்றம் சாட்டப்பட்ட நபா்களுடன் சோ்ந்து பொதுமக்களை தூண்டியதுடன், எதிா்தரப்பினா் மீதும், பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீதும் கற்களையும்  கண்ணாடி பாட்டில்களையும் வீசினாா். அதன் பிறகு கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக மாலிக் மேற்கு வங்கத்திற்கு தப்பிச் சென்றாா் என தெரிய வந்தது.

மாலிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் மாலிக் சம்பந்தப்பட்டுள்ளாா். முதல் முறையாக ஒரு கொலை முயற்சி வழக்கில் 2016-ஆம் ஆண்டில் அவா் கைது செய்யப்பட்டாா். ஆறு குற்ற வழக்குகளில் அவா் ஏற்கெனவே சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

கடத்த ஏப்ரல் 16-ஆம் தேதி ஜஹாங்கீா்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது வகுப்புவாத வன்முறை ஏற்பட்டது. இதில் போலீஸாா் உள்பட 8-9 போ் காயமடைந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக கைதான 37 பேருக்கு எதிராக கடந்த மாதம் தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் 2,063 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.