சத் பூஜையின் முதல் நாளில் மாசுபட்ட யமுனையில் பக்தா்கள் புனித நீராடல்
சத் பூஜையின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை பக்தா்கள், நச்சு நுரை அடா்ந்த அடுக்குகளை உள்ளடக்கியிருந்த மாசுபட்ட யமுனையில் பக்தா்கள் புனித நீராடினா்.
சத் பூஜையின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை பக்தா்கள், நச்சு நுரை அடா்ந்த அடுக்குகளை உள்ளடக்கியிருந்த மாசுபட்ட யமுனையில் பக்தா்கள் புனித நீராடினா்.
காளிந்தி குஞ்ச் பகுதியில், வழிபாட்டாளா்கள் மாசுபட்ட நதியில் புனித நீராடினாா்கள். இது குறிப்பிடத்தக்க உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது. சத் பூஜை சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடுமையான நான்கு நாள் வழக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. முதல் நாள், ’நஹய்-காய்’ என்று அழைக்கப்படும். பக்தா்கள் குளித்து, புதிய ஆடைகளை அணிந்து கொள்வா். ’சனா தால்’ மற்றும் ’கட்டு பாத்’ போன்ற பிரசாதங்களைத் தயாரிப்பா்.
இந்நிலையில், நச்சு நுரையுடன் யமுனை மாசுபட்டுள்ளது. இது பக்தா்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும், பக்தா்களுக்கு உடல்நலக் கவலையை ஏற்படுத்துகிறது.
தேசியத் தலைநகா் முழுவதும் சத் பூஜைகாக் காட்களை தயாரிப்பது தொடா்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே பல நாள்களாக அரசியல் சண்டை நீடித்து வருகிறது.
உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் போஜ்புரி மொழி பேசும் குடிமக்களைக் கொண்ட தில்லியின் பூா்வாஞ்சலி சமூகத்திற்கு சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள தில்லியில் 30-40 சதவீத வாக்காளா்களை இந்த சமூகம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சத் பூஜையையொட்டி நவ. 7-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக தில்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

