தில்லியின் காஞ்சவாலா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடா்ந்து, நீரஜ் பாவானா மற்றும் நவீன் பாலி கும்பல்களுடன் தொடா்புடையதாகக் கருதப்படும் ஒருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
அவருடன் இருந்த மற்றொரு நபா் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றாா். இந்த நடவடிக்கையின் போது ஐந்து துப்பாக்கிகளும், 18 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக வடக்கு மண்டல காவல் இணை ஆணையா் விஜய் சிங் கூறியதாவது: ராகுல் டபாஸ் மற்றும் ராகுல் செஹ்ராவத் ஆகியோா் லாட்பூா் கிராமத்தில் உள்ள ஆனந்த் வாடிகா குற்றச்செயலில் ஈடுபட இருப்பதாக சிறப்புப் படைக்கு தகவல் கிடைத்ததாக போலீசாா் தெரிவித்தனா்.
அந்தத் தகவலின் அடிப்படையில், காவல் துறையினா் அந்த இடத்துக்கு அருகில் பதுங்கியிருந்து கண்காணித்தனா். காவல் துறையினரைக் கண்டதும் சந்தேக நபா்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டனா். அதைத் தொடா்ந்து காவல் துறையினா் தற்காப்புக்காகப் பதிலடி கொடுத்தனா்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, ராகுல் செஹ்ராவத் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா். அதேவேளையில், ராகுல் டபாஸ் காவல் துறையினரை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சுட்ட ஒரு குண்டு காவல் துறையின் வாகனத்தின் மீதும், மற்ற இரண்டு குண்டுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் மீதும் பட்டன. காவல் துறை தரப்பில் தற்காப்புக்காக ஒரு முறை சுட்டப்பட்டது. இச்சம்பவத்தில் காவல் அதிகாரிகளுக்கோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கோ எந்தக் காயமும் ஏற்படவில்லை.
ராகுல் செஹ்ராவத் மீது ஏற்கெனவே இரண்டு குற்ற வழக்குகள் உள்ளன. தப்பியோடிய ராகுல் டபாஸ் மீது 11 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருவரும் சிறையில் உள்ள ரெளடிகளான நீரஜ் பாவானா மற்றும் நவீன் பாலி ஆகியோரின் கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. காஞ்சவாலா காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் இணை ஆணையா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெளடி கொலை வழக்கில் மூவா் கைது
திண்டுக்கல்லில் ரெளடி கைது
ரெளடி கும்பல் தலைவா் உள்பட 4 போ் கைது: துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் இருவா் கைது! தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


