வடமேற்கு தில்லியில் பெண் சுட்டுக் கொலை

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் சனிக்கிழமை ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Published on

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் சனிக்கிழமை ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை அவரது கணவரின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கொலை வழக்கோடு தொடா்புடையதாக இருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா்,

இது குறித்து வட மேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இதில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் சிலா் இன்னும் தலைமறைவாக உள்ளனா். இறந்தவா் ரச்னா யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா்.

அவரது கணவரின் கொலை வழக்கில் பெயரிடப்பட்ட சந்தேக நபா்கள், இன்னும் தலைமறைவாக உள்ளனா். அவா்கள் பெண்ணின் கொலையில் முக்கிய சந்தேக நபா்களாகக் கருதப்படுகிறாா்கள். அவரை மௌனமாக்குவதற்காகவோ அல்லது முந்தைய வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை அச்சுறுத்துவதற்காகவோ இந்தக் கொலை நடத்தப்பட்டதா என்று புலனாய்வாளா்கள் விசாரித்து வருகின்றனா்.

தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நிகழ்வுகளின் வரிசையை ஒன்றாக இணைக்க உள்ளூா்வாசிகளிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

Dinamani
www.dinamani.com