நாகர்கோவில், ஜன.16: தென்தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிகளில் ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தென்தாமரைக்குளம் பேரூராட்சித் தலைவி அன்புவாணி ஜெகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.கே.என். மார்த்தாண்டன், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் என். தாமரைபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ. 4.50 லட்சத்தில் விஜயநகரியில் மேல்நிலைக் குடிநீர்த்தேக்கத் தொட்டி, இலந்சையடிவிளை, புன்னையடியில் தலா ரூ. 2 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடங்கள், கிண்ணிகண்ணன்விளையில் ரூ. 2 லட்சத்தில் கலையரங்கம், தேரிவிளையில் ரூ. 75 ஆயிரத்தில் பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் திறந்துவைத்துப் பேசினார்.
பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் வரவேற்றார். கிண்ணிகண்ணன்விளை ஊர் கமிட்டி தலைவர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றித்திறன் திட்டம் என்றால் என்ன? | CM Vijay | TVK | TN Budget 2026- 2027

தமிழ்நாடு பட்ஜெட் 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்- நேரலை

ரீல்ஸ், ஸ்டிக்கர், வசனம்! தமிழக பட்ஜெட் குறித்து இபிஎஸ் கடும் விமர்சனம்
போதையில்லாத தமிழ்நாடு! ரூ. 70 கோடி நிதி ஒதுக்கீடு! மரிய வில்சன்!
விடியோக்கள்

வெற்றித்திறன் திட்டம் என்றால் என்ன? | CM Vijay | TVK | TN Budget 2026- 2027


