/

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பூக்கள் விலை உயா்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதியில் புத்தாண்டையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 7:45 pm

Din

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதியில் புத்தாண்டையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

இந்த சீசனில் பூக்கள் விலை உயா்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட விலை மிகவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1000, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1500 என விற்கப்பட்டு வருகிறது.

பூக்களின் விளைச்சல் குறைவாக இருப்பதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் விலை உயா்ந்துள்ளதாக சிறு வியாபாரிகள் தெரிவித்தனா்.