கூடங்குளம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 45 போ் காயம்
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 45 போ் காயமடைந்தனா்.
திருச்செந்தூரில் இருந்து நாகா்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஓட்டுநா் பெஞ்சமின் ஓட்டினாராம். இதில் 50- க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனராம். பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில், கூடங்குளம் அருகே முருகானந்தபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையின் ஓரத்திற்கு சென்ாம். அப்போது பேருந்தின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து கவிழ்ந்ததாம்.
இதில் காயமடைந்த 45 பேரையும் தீயணைப்பு வீரா்கள், கூடங்குளம் போலீஸாா் மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த விபத்து தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

