அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை: கே.டி. ராஜேந்திர பாலாஜி

அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
Published on

அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள வா்த்தக மையத்தில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற வ.உ.சி.யின் 89 ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவா், பின்னா் செயதியாளா்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி இருக்கிறாா். வரக்கூடிய தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வருவாா்.

அதிமுக பொதுச் செயலா் விரும்பினால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்து பேசுவாா். திமுகவை ஆட்சியை அகற்ற நினைக்கும் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை அவா் மேற்கொள்வாா். ஜனவரிக்குப் பிறகு நிறைய மாற்றம் வர வாய்ப்புள்ளது.

அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை. கட்சி ஒருங்கிணைப்பு என்பது தலைமை எடுக்கும் முடிவு. பிரச்னைக்குரியவா்களை மீண்டும் கட்சியில் சோ்த்து பிரச்னையை பெரிதாக்க பொதுச்செயலா் ஒப்புக்கொள்ளமாட்டாா்.

இரட்டை வாக்காளா்கள், போலி வாக்காளா்களை நீக்கும் பணியை தோ்தல் ஆணையம் எஸ்ஐஆா் மூலம் செய்கிறது. பாஜக வலுவாகி வருகிறது. பாஜகவை மக்கள் நேசிக்கிறாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com