கோழிக் கழிவு வாகனங்களை தடுக்கக் கூடாது: ஆட்சியரிடம் விற்பனையாளர்கள் மனு
கறிக்கோழிகள் மற்றும் கோழிக்கழிவு வாகனங்களை தடுக்கக்கூடாது என கறிக்கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கறிக்கோழிகள் மற்றும் கோழிக்கழிவு வாகனங்களை தடுக்கக்கூடாது என கறிக்கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் விஜயகுமார், செயலர் ஜெஷீத், பொருளாளர் டேவிட் லிவிங்ஸ்டன், மாவட்ட வணிகர் சங்க பேரவைத் தலைவர் டேவிட்சன், செயலர் கிராஸ் அருள்ராஜ், பொருளாளர் ஜேம்ஸ் மார்சல், துணைத் தலைவர் ராஜதுரை உள்ளிட்டோர் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.
அதில், கன்னியாகுமரி மாவட்ட கறிக்கோழி விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கறிக் கோழி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். வியாபாரத்தின்போது வரும் கழிவுகளை தங்கள் சொந்த செலவில் பன்றி பண்ணைகளுக்கு தீவனமாக எடுத்து செல்கின்றனர். பன்றி பண்ணைகளுக்கு வாகனங்களில் கோழிக்கழிவுகளை எடுத்துச் செல்லும்போது போலீஸார் சோதனை நடத்துகின்றனர். அதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்தாலும் போலீஸார் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்று கறிக்கோழிகளை விற்பனைக்கு கொண்டுசெல்லும்போதும் போலீஸார் சோதனை என்றபெயரில் காலதாமதம் ஏற்படுத்துகின்றனர். இதனால் கோழிகள் இறந்து நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே, கறிக்கோழிகள் மற்றும் கோழிக்கழிவுகளை கொண்டுசெல்லும்போது இடையூறு ஏற்படாதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்படுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...