/

குடிசை மாற்று வாரிய வீடுகளை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

அஞ்சுகிராமம் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :21 மே 2018, 8:03 pm

அஞ்சுகிராமம் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வாரியூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20 பேர் நோவில் ஜாக்குலின் கிரேசி என்பவர் தலைமையில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து திங்கள்கிழமை அளித்த மனு:
அஞ்சுகிராமம் லட்சுமிபுரம் பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இப்போது வாரியூர் பகுதியில் செயல்படாத உப்பளத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டப்பட்டுவதாக அறிந்தோம். அதில் வீடு இல்லாத எங்களுக்கு வீடுகள் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.