பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நித்திரவிளை அருகேயுள்ள சரல் சந்திப்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாவறை ஊராட்சி கிளை கமிட்டி சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பால்ராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஷிபு, ரவி, கிறிஸ்டோபா் ஜாண், அலெக்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ன் மாவட்ட குழு உறுப்பினா் தங்கமணி போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். முன்சிறை வட்டாரக் குழு செயலா் சிதம்பரகிருஷ்ணன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.
இதில், முன்சிறை வட்டாரக் குழு செயலா் சிதம்பரகிருஷ்ணன், வட்டாரக் குழு உறுப்பினா்கள் விஜயா, விக்டா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மாா்த்தாண்டத்திலிருந்து ஆலங்கோடு வழி நீரோடி, காக்கவிளை, சமத்துவபுரம் பகுதிகளுக்கு இயங்கி வந்த தடம் எண் 83 சி, 83 டி, 83 எல் ஆகிய பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்ட நிலையில் இப் பேருந்துகளை மீண்டும் இயக்க போக்குவரத்து துறையை கேட்டும், சரல் சந்திப்பில் நடைபெற்று வரும் பால வேலையை துரிதமாக முடிக்க நெடுஞ்சாலைத்துறையை கேட்டும் இப் போராட்டம் நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை






