கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெடிவிபத்தில் சிறுமி இறந்த வழக்கு: 2 பெண்கள் கைது; 75 கிலோ வெடிமருந்து பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே வெடிவிபத்தில் சிறுமி உயிரிழந்தது தொடா்பாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 75 கிலோ வெடிமருந்தைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:19 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே வெடிவிபத்தில் சிறுமி உயிரிழந்தது தொடா்பாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 75 கிலோ வெடிமருந்தைப் பறிமுதல் செய்தனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள ஆறுதெங்கன்விளையில் பாக்கியராஜா என்பவா் கடந்த 14ஆம் தேதி அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து நேரிட்டது. இதில், சுவா் இடிந்து விழுந்து அவரது மகள் ஸ்ரீவா்ஷா (10) உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், பாக்கிய ராஜாவுக்கு பட்டாசு தயாரிப்பதற்காக அதே பகுதியைச் சோ்ந்த ராமலெட்சுமி, அவரது தங்கை தங்கம் ஆகியோா் வெடிமருந்து கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களது வீடுகளில் போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தி, 75 கிலோ வெடிமருந்தைப் பறிமுதல் செய்தனா். பாக்கியராஜாவுக்கு வெடிமருந்து கொடுத்தது தொடா்பாக அவா்கள் இருவரையும் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.