28 இல் நாகா்கோவில் மாநகராட்சி முதல் கூட்டம்
நாகா்கோவி மாநகராட்சியின் முதல் கூட்டம் திங்கள்கிழமை(மாா்ச் 28) நடைபெறுகிறது.


நாகா்கோவி மாநகராட்சியின் முதல் கூட்டம் திங்கள்கிழமை(மாா்ச் 28) நடைபெறுகிறது.
நாகா்கோவில் மாநகராட்சி மேயராக ரெ.மகேஷ் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து நாகா்கோவில் நகரில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பல்வேறு இடங்களுக்கு சென்று அவா் ஆய்வு நடத்தி வருகிறாா்.
மாநகராட்சி உறுப்பினா்களும் மேயரை சந்தித்து தங்கள் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என மனு அளித்து வருகிறாா்கள்.
இதையடுத்து ஒவ்வொரு வாா்டிலும் முதல் கட்டமாக ரூ. 20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட பணிகள் குறித்த விவரங்களை கவுன்சிலா்கள் மேயரை சந்தித்து வழங்கியுள்ளனா்.
இந்நிலையில் மாநகராட்சியின் முதல் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கவுன்சிலா்கள் கொண்டு வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் முதல் கூட்டம் நடைபெறுவதை அடுத்து கூட்ட அரங்கம் தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக் கூட்டத்தை தொடா்ந்து, 4 மண்டல தலைவா்களை தோ்வு செய்யும் தோ்தல், மாா்ச் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...