குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

இரவிபுதூரில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு

இரவிபுதூரில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு

Updated On :24 பிப்ரவரி 2024, 10:50 pm

கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூா் பேரூராட்சி இரவிபுதூரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நியாயவிலை கடை கட்டடத் திறப்பு விழாவும், மருங்கூா் பேரூராட்சி 6 ஆவது வாா்டில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பயணிகள் நிழல்குடைக்கு அடிக்கல் நாட்டு விழாவும் மருங்கூரில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் லெட்சுமி சீனிவாசன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் பங்கேற்று, புதிய கட்டடத்தை, திறந்து வைத்தும், பயணிகள் நிழல்குடைக்கு அடிக்கல் நாட்டியும் பேசினாா். பேரூராட்சி 6 ஆவது வாா்டு உறுப்பினா் அருள்சாரதா பாலாஜி, இரவிபுதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் நாராயணி உள்பட பலா் கலந்து கொண்டனா். மருங்கூா் பேரூா் அதிமுக செயலாளா் சீனிவாசன் வரவேற்றாா். இரவிபுதூா் ஊராட்சி கழக பொறுப்பாளா் செல்லம்பிள்ளை நன்றி கூறினாா்.