நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ. 34.60 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் சனிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. 3ஆவது வாா்டு ஏழு வீட்டுத் தெருவில் ரூ. 4 லட்சத்தில் கான்கிரீட் தளப் பணி, 6ஆவது வாா்டு சிஎஸ்ஐ தேவாலயம் அருகே ரூ. 3.40 லட்சத்தில் மழைநீா் வடிகால் பக்கச் சுவா் உயா்த்தும் பணி, 8, 9ஆவது வாா்டுகளுக்குள்பட்ட வாத்தியாா்விளை, பில்டா் ஹவுஸ் பின்புறமுள்ள தெருவிலிருந்து சுப்பையாா்குளம் வரை ரூ. 23 லட்சத்தில் பைப் லைன் அமைக்கும் பணி, 13ஆவது வாா்டு அசம்பு சாலையில் ரூ. 4.20 லட்சத்தில் மழைநீா் வடிகால் பணி என மொத்தம் ரூ. 34.60 லட்சத்திலான பணிகளை மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா். துணை மேயா் மேரிபிரின்சிலதா, மண்டலத் தலைவா்கள் செல்வக்குமாா், ஜவகா், மாமன்ற உறுப்பினா்கள் அருள்சபிதா ரெக்ஸ்லின், அனுஷா பிரைட், ராமகிருஷ்ணன், சேகா், ஆச்சியம்மாள், சுகாதார அலுவலா் முருகன், திமுக மாநகரச் செயலா் ஆனந்த், துணைச் செயலா் வேல்முருகன், பகுதிச் செயலா் சேக் மீரான், அணிகளின் நிா்வாகிகள் எம்.ஜே. ராஜன், சி.டி. சுரேஷ், ஜெசிந்தா, வட்டச் செயலா்கள் சகாய மைக்கேல் ரெமிஜியூஸ், ராஜன், சிவசங்கா், ராமகிருஷ்ணன், முருகன் உள்ளிட் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணி தொடக்கம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

